கற்பக தருவான கல்யாண முருங்கை பயன்கள் அறிவோமா!!

மரத்திலும், இலையிலும் முள் மாதிரியான வடிவம் இருப்பதால் இதனை கிராமங்களில் முள்முருங்கை என்றழைக்கின்றனர். வயல்வெளிகளில் வேலிப்பயிராகவும், வீடுகளில் செடிகளாகவும் வளர்க்கப்படுகிறது.

இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் எரித்ரினைன், எரிசோவைன், எரிசோடைன், எரிசோனைன், ஃபெருலிக் அமிலம், அல்பினா, ஐசோப்ளவோன், டோகோசில் ஆல்கஹால் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன.

பெண்கள் உடம்பில் ஓடக்கூடிய ஹார்மோனில், ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதுதான் இம்மூலிகையின் முக்கிய பணி.

நீர் கட்டிகளுக்கும், மூட்டுவலிக்கும், மருந்தாக பயன்படுகிறது. இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வீக்கங்களின் மேல் கட்டினால், வீக்கம் கரையும்.

இலைச் சாறுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து, பூசிக் குளித்தால் சொறி, சிரங்கு தீரும்.

இம்மூலிகையின் பட்டை மற்றும் இலைகள் மருத்துவ பயன் கொண்டவை. ஈரல் கோளாறுகளுக்கு, கண் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும்.

10 கிராம் மரப்பட்டையை, 100 மில்லி பாலில் ஊறவைத்து, தினமும் 20 மி.லி., எடுத்துக்கொண்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.