மருந்தாகும் வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீர்… மகத்துவம் அறிவோமா…
வெண்டைக்காயில் காணப்படும் பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே அதன் வழவழப்புக்குக் காரணம்.
இந்த பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.
தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயைச் சிறிதாக நறுக்கிப் போட்டு ஊற வைக்க வேண்டும். காலை எழுந்ததும் அந்த நீரைப் பருகுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் இந்த நீரை அருந்துவதால் ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
பெருங்குடலின் உள்பகுதியில் படிந்து பெருங்குடல் சிறப்பாகச் செயல்படவும் உதவும்.
உடம்பின் எலும்புகள் வலிமை பெறும். ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) வராமல் தடுக்கப்படும்.
சுவாசம் தொடர்பான பிரச்னை தீரும். மேலும் ஆஸ்துமா கோளாறு சரியாகும்.
வெண்டைக்காயில் ஆக்சலேட் அதிகம் உள்ளதால் கல் பிரச்னையுள்ளவர்கள் வெண்டைக்காயைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.