கோடையில் ஏசிக்கு சிறந்த வெப்பநிலை எது?

பொதுவாக நம் உடல் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகும். அதனால் 23 - 39 டிகிரி வரை தான் வெப்பநிலையை எளிதாக தாங்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

ஆகையால் ஏசியை 23 டிகிரி கீழ் ஓட விடும்போது அறையின் வெப்பநிலை நம் உடலைவிட மிகவும் குறைவாக இருக்கும்.

இது நம் உடலின் அதிக வெப்பநிலையை குறைத்து, மிக குளிர்ந்த நிலையான ஹைப்போதெர்மியா என்ற பிரச்னையை சிலருக்கு ஏற்படுத்தக்கூடும்.

ஹைப்போதெர்மியாவால் உடலின் ரத்த ஓட்டம் பாதிப்படையும். சிலருக்கு உறுப்புகளுக்குப் போதுமான ரத்த ஓட்டம் கிடைக்காது. ஆர்த்ரைட்டிஸ் போன்ற பிரச்னைகளும் வரலாம்.

அதனால், 26 டிகிரி அல்லது அதற்கும் மேலாக ஏசியை பயன்படுதவது மிகவும் சிறந்தது என டாக்டர்கள் அறிவுறுகின்றனர்.

நீங்கள், 'ஏசி' அறையில் இருந்து வெளியே கிளம்புவதாக இருந்தால், உடனே வெளியேறி விடாதீர்கள். வெப்ப நிலை மாற்றம் காரணமாக உடலில் நீரேற்றம் குறைந்து சோர்வு அதிகரிக்கும்.

இதை தவிர்க்க, 'ஏசி' அறையிலிருந்து கிளம்பும் முன், 10 நிமிடங்கள், 'ஏசி'யை நிறுத்திவிட்டு, அறை வெப்ப நிலையில் இருந்து பின், வெளியே வாருங்கள்.