பருவகால நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி?
குளிர்க்காலத்தில் பெரிதும் பாதிக்கப்படுவர்கள் குழந்தைகள் தான். ஆஸ்துமா இருக்கும் குழந்தைகளை குளிர் அதிகமாக தாக்கக்கூடும்.
எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு, இந்தப் பாதிப்புகள் உடனடியாகத் தொற்றிக் கொள்ளும்.
முடிந்தவரை, வீசிங் வரும் குழந்தைகள் இருக்கும் இடத்தை, தூசி இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்வெட்டர் அணிவித்து அனுப்பலாம். சளி பிடிக்காமல் இருக்க அடிக்கடி துளசி நீரை கொடுக்கலாம்.
திப்பிலிப்பொடி அல்லது அதிமதுரம் அரை டீஸ்பூன் எடுத்து, தேனில் குழைத்து, தினமும் 2 வேளை சாப்பிட்டால், ஆஸ்துமா தொந்தரவிலிருந்து தப்பிக்கலாம்.
இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற சுலபமாகச் செரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். இரவு உணவை சீக்கிரம் கொடுங்கள்.
பாலில் மிளகு, மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் தரலாம். கபம் வரமால் இருக்கும். தொண்டைக்கும் நல்லது.
கேக், பஃப்ஸ், பன் போன்ற பேக்கரி உணவுகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்த ஸ்நாக்ஸ் கொடுப்பதைத் தவிர்த்து, நட்ஸ், உலர் திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.