தோல் மருத்துவத்தில் நவீன லேசர் சிகிச்சைகள்

தோல் மருத்துவம் என்றாலே மருந்து, மாத்திரைகள், ஆயின்மென்ட்ஸ் என்ற நிலை மாறி, தற்போது நவீன லேசர் சிகிச்சை முறைகள் சருமத்தை பொலிவூட்டுகின்றன.

முகப்பரு என்பது டீன்ஏஜ் பருவத்தினருக்கு வரக்கூடிய பொதுவான பிரச்னை. 13 - 35 வயது வரை சிலருக்கு, அதற்குப் பின்னாலும் வரக்கூடிய முகப்பரு தானாகவே மறைய வாய்ப்புள்ளது.

இருப்பினும், கரும்புள்ளி, முகப்பரு தழும்புகள் நிரந்தரமானவை என்பதால், முறையான சிகிச்சை அவசியமானது. குறைந்தபட்சமாக 3 - 5 மாத சிகிச்சை தேவைப்படும்.

திருமணம், வேலைவாய்ப்புக்காக சிகிச்சையை விரைவுபடுத்த லேசர் டோனிங் சிகிச்சை ((Qswitched Ndyag Laser Peel) பலனளிக்கும்.

இதற்கு 4 - 6 முறை வரை லேசர் சிகிச்சை தேவைப்படும். முகப்பரு, கரும்புள்ளிகள் குறைவதுடன் முகப்பொலிவும் அதிகரிக்கக்கூடும்.

பச்சை குத்திய எழுத்துக்களை நீக்கும் லேசர் சிகிச்சை (Laser Tattoo Removal). 2 முதல் 4 மாதங்களுக்கு முன்பே சிகிச்சையை ஆரம்பித்தால் தழும்பின்றி நல்ல முறையில் எழுத்துக்களை நீக்க முடியும்.

பலரும் சில நாட்களுக்குள் நீக்கிவிடலாம் என்ற கருத்தில் சிகிச்சை எடுக்க நினைப்பது தவறானது. முன்கூட்டியே திட்டமிட்டு சிகிச்சை எடுக்க வேண்டும்.