ஆரோக்கியத்தை அள்ளி தரும் பூவரசம் பூ மரம்! 
        
பூவரசம் மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் அனைத்தும் மருத்துவ குணம் உள்ளவையாகும். 
        
மஞ்சள் வர்ணத்தில் பூக்கும், பூவரசம் பூக்கள் அரிய மருத்துவ குணங்களை கொண்டது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
        
பூவரசம் இலைகள் விஷத்தை போக்கும் தன்மை இருப்பதால் பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டு கடிகளுக்கு, மருந்தாக சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வந்தனர். 
        
 தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பூக்களை நீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்க வேண்டும். 
        
பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியும் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும். 
        
சொறி, சிரங்கினால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசி வந்தால் தோல் மென்மையாகும். 
        
பூவரசம் காயை உடைத்தால், மஞ்சள் நிறத்தில் திரவம் வரும். அதை தேமல் மற்றும் படை வந்த இடத்தில் தடவினால், விரைவில் அரிப்பு நீங்கி, தேமல் மறையும்.  
        
சீல் வடியும் புண்களில், பூவரசம் மரத்தின் பழுத்த இலைகளை வைத்து கட்டினால், நீர் உறிஞ்சப்பட்டு புண் நன்றாக ஆறிவிடும்.  
        
ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த ஆலோசனைகளை பயன்படுத்துவது நல்லது.