மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கை என்னென்ன?
மழைக்காலத்தில் முழுமையாக உடலை மறைக்கும்படி ஸ்வெட்டர் போன்ற ஆடைகளை அணிவதால் குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
கொசுக்களிடம் தப்பிக்க கொசு வலையே சிறந்தது.
மழை காலத்தில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கலாம்.
குறிப்பாக பொழுதுபோக்குகிற்கு என்று பிற இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும்.
குடை, ரெயின் கோட், மாஸ்க், கிளவுஸ், போன்ற பாதுகாப்பு கவசங்கள் பயன்படுத்தல் நல்லது.
வேலை காரணமாக, வங்கி, மருத்துவமனை போன்ற அவசர தேவைக்கு மழையில் நனையாதபடி பஸ், கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் சிறந்தது.
மழையில் நனையாமல் இருந்தாலே, பிரச்னை குறைகிறது. ஈரமான துணிகளை உடனே மாற்ற வேண்டும்.
'ஆன்டி பங்கல்' பவுடர்கள் பூசிக்கொள்வதால் பூஞ்சைகள் பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம்.