சிகரெட் புகையால் பாதிக்கப்படும் உடல் உறுப்புகள்...
சிகரெட் புகை, புகைப்பவர்களின் நுரையீரலை மட்டும் பாதிக்கும் விஷயம் இல்லை. அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பவர்களின் நுரையீரலை, இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது.
சிகரெட் புகையை சுவாசிப்பதால், உடலில் ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படுகிறது.
மற்றவர்கள் வெளியிடும் சிகரெட் புகையை நாம் சுவாசிக்கும் போது, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் செயல்பாடு அதிகரிக்கிறது; ரத்த நாளங்களில் அழற்சியை உண்டாக்குகிறது.
இதன் விளைவாக, ரத்தக் குழாய்களின் உள், வெளிப்புறத்தில், பிளாக் எனப்படும் கொழுப்பு படிமங்கள் படிகிறது.
இது, மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
சிகரெட் புகையால் நுரையீரல் மற்றும் சுவாசப் பாதையில் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இது தொடர்ச்சியான இருமல், மூச்சிரைப்பு, மூச்சுக் குழாய் அழற்சி மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.
ஏற்கனவே ஆஸ்துமா, நாள்பட்ட சுவாச நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு, அறிகுறிகளை மேலும் மோசமாக்கும்.
கர்ப்பிணி பெண் சிகரெட் புகையை சுவாசிப்பதால், கருவில் வளரும் குழந்தை, நிக்கோட்டின், கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுக்களை சுவாசித்து, எடை குறைந்து, வளர்ச்சிக் குறைபாடுகளுடன் பிறக்கும்.
சிகரெட் புகை இல்லாத சூழலில் உள்ள குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, புகைக்கு ஆளாகும் பச்சிளங் குழந்தைகள், உயிரிழைக்கும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் சிகரெட் புகையை சுவாசிப்பதால், சர்க்கரை நோய், வளர்சிதை மாற்ற கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.