பக்கவாதம் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் ரத்தம் தடைப்பட்டு, அது இயங்குவதற்கு தேவையான சக்தி இல்லாமல், அதன் செல் தசைகள் பாதிப்படைவது ஆகும்.
மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். அதை தவிர்க்க என்ன செய்யலாம் என அறிந்துக்கொள்வோம்.
கொழுப்பு சத்து நிறைந்த எண்ணெய் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அளவை முறையாக வைத்திருக்க வேண்டும்.
வயதானவர்களை பக்கவாதம் அதிகளவில் தாக்குகிறது. அவர்கள் அதிலிருந்த மீண்டு வருவதற்கு மருத்துவரின் பரிந்துரைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
பக்கவாதம் ஏற்பட்டதும் உடல் உறுப்புகளான கை, கால்கள் வலுவில்லாமல் இருக்கும். அதை பலப்படுத்தும் வகையிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக பக்கவாதம் ஏற்படும் முன் பேச்சு குளறல், கைகால்கள் செயல்படாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும். அப்படி இருந்தால் காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுக வேண்டும்.