தசைப்பிடிப்பை தடுக்கும் வார்ம் -அப்!

உடல் வலிக்கு தசைகளை வலிமையாக்க, 'ரெசிஸ்டென்ஸ் டிரைனிங்' மற்றும் உடலை பலப்படுத்த 'ஸ்ட்ரெந்த் டிரைனிங்' செய்யுங்கள் என்று நிபுணர்கள் ஆலோசனை தருகின்றனர்.

எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும், 'வார்ம் -அப்' செய்வது முக்கியம் என்றாலும், உடல், தசைகளை வலிமையாக்கும் பயிற்சி செய்யும் போது இது மிகவும் முக்கியம்.

காரணம், இயல்பான பயிற்சிகள் செய்யும் போது, உடல் எடையால் ஏற்படும் உளைச்சல், மிதமான வலி மட்டுமே இருக்கும்.

ஆனால், வெயிட் லிப்டிங், ஸ்ட்ரெந்த் டிரைனிங் செய்யும் போது, டம்ளிங், ரப்பர் குழாய் போன்றவற்றை உபயோகிப்போம்.

இதனால், உடல் எடை, புவியீர்ப்பு விசையுடன், இந்தக் கருவிகளின் எடையும் சேர்ந்து, தசைப் பிடிப்பு, முதுகு தண்டில் உள்ள டிஸ்க் எனப்படும் வட்டு நகர்வது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

எடை துாக்கும் பயிற்சியை முறையாக செய்யாததால், 70 சதவீதம் பேருக்கு தசைப் பிடிப்பு, முதுகு வலி வருவதாக சர்வதேச ஆய்வுகள் கூறுகின்றன.

இது ஒரே நாளில் நடக்காது. தினமும் முறையற்ற பயிற்சி செய்யும் போது, சிறிது சிறிதாக ஏற்படும் பிரச்னை ஒரு நாளில் வெளிப்படும். குறிப்பாக கீழ்முதுகு, தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் வரலாம்.

எனவே உடலின் எந்த பகுதிக்கு உடற்பயிற்சி செய்ய விரும்புகிறோமோ அந்தப் பகுதியை தயார்படுத்தும் பிரத்யேக வார்ம் அப் செய்ய வேண்டும்.