இணைநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் தற்போது பலருக்கும் சாதாரண சளி காய்ச்சல் என்கிற அளவில் கொரோனா தொற்று விரைவில் குணமடைந்து வருகிறது.

சிறு வயது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள சிறுவர்கள், பல்வேறு இணை நோய் கொண்டோர் கொரோனா பாதிப்பு எளிதில் ஏற்படலாம்.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர், முதியோர் போன்றவர்களுக்கு தொற்று தீவிரமாக ஏற்படும்.

அவர்கள் பொது இடங்களில் மாஸ்க், சோப்பு போட்டு கழுவுதல் போன்ற பழைய நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

மேலும் மூன்று நாட்களுக்கு மேல் தீவிர காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் தெரிந்தாலே உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியம்.

மேற்கத்திய நாடுகளைப் போல இங்கும் 'ப்ளூ' வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இந்த தொற்று காலம் முடியும் வரை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.