தென்னிந்திய சினிமா அளவிற்கு பாலிவுட் இல்லை : காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் நடித்து வரும் காஜல், தற்போது 'இந்தியன் 2' திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'ஹிந்தி தான் எனது தாய்மொழி. ஹிந்தி திரைப்படங்களை தான் பார்த்து வளர்ந்தேன்.

ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு, ஹிந்தி திரையுலகில் குறைவு என்றே கருதுகிறேன். அதனால் தான் ஹிந்தியை விட்டுவிட்டு தென்னிந்திய சினிமாவில் நடிக்க விரும்புகிறேன்.

ஏராளமானவர்கள், தங்கள் திரை வாழ்க்கையை ஹிந்தியில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான காரணம் உலகளவில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் தான்.

இங்கு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் தனித்துவமான திரைப்படங்கள் வருகின்றன' என கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகிறது.