ஒற்றை தங்க வளையலை அடகு வைக்க முடியாதா?
ஒற்றை தங்க வளையலுக்கு கடன் தரக்கூடாது என்று ரிசர்வ் வங்கி எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.
நகையின் வடிவத்தையோ, அது ஜோடியாக தான் இருக்க வேண்டும் என்பதையோ ஆர்.பி.ஐ, கட்டாயப்படுத்தவில்லை.
ஆனால், ஒரே ஒரு தங்க வளையலை மட்டும் எடுத்து செல்லும் போது, நகை மதிப்பீட்டாளருக்கு ஏதாவது சந்தேகம் வரக்கூடும்.
ஒரு ஜோடி வளையலில் ஒன்றை மட்டும் அடகு வைக்கும் போது, அது 'திருடப்பட்ட நகையாக இருக்கலாமோ' என்ற தேவையற்ற சந்தேகம் கட்டாயமாக ஏற்படக்கூடும்.
அதேவேளையில், வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்தாமல், நகை மூழ்கினால், அதை ஏலம் விடும்போது, ஜோடி வளையலுக்குத் தான் மதிப்பு அதிகம்.
ஒற்றை வளையல் விற்பனையாகாமல் போகலாம் என்ற வியாபார நோக்கமும் மறுப்புக்கு காரணமாக இருக்கலாம்.
இதனால், ஒரு சில தனியார் வங்கிகளில் ஒரு தங்க வளையலுக்கு அடகு கடன் தர மறுக்கக்கூடும்.
எனவே, அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிக்கு செல்லும்போது, இதுபோன்ற பாதுகாப்புமிக்க கடனைக் கொடுக்க தயாராக இருப்பர்.