மலைகளின் கொண்டை ஊசி வளைவுகளிலும், பரந்துவிரிந்த ஆள் நடமாட்டமற்ற நெடுஞ்சாலையிலும் லாங் ரைட் செல்ல யாருக்குத்தான் விருப்பம் இருக்காது?

வாழ்வில் ஒருமுறையாவது தனியாகவோ, நண்பர்களுடனோ அல்லது வாழ்க்கைத் துணையுடனோ லாங் ரைட் செல்ல ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம்.

அனைத்து தரப்பு மக்களும் நிறைவேற்றிக்கொள்ள ஏற்ற வாழ்நாள் ஆசைதான் பைக் லாங் ரைட்.

இதனால் மனம் புத்துணர்ச்சி அடைவதுடன், மறக்கமுடியாத வாழ்வனுபவங்களும் கிடைக்கும்.

லாங் ரைட் செல்லும் முன்னர் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய பொருட்களை பட்டியலிட வேண்டும்.

லெதர் ஜாக்கெட், ஷூக்கள், லகேஜ்களை கட்ட எலாஸ்டிக் கயிறுகள், கையுறைகள், மாஸ்க், ஹெல்மெட், தண்ணீர் பாட்டில் உட்பட பல அவசியமான பொருட்களை மறக்காதீர்கள்.

லே லடாக், ஊட்டி, கோவா போன்ற இடங்களுக்கு செல்லும்போது ஏடிஎம் கார்டுகளை மட்டும் நம்பாமல் கையில் பணம் வைத்துக்கொள்வது நல்லது; அவசர தேவைக்கு உதவும்.

மழை, வெயில் இரண்டையும் தாங்கும் தரமான வெயிஸ்ட் ஜாக்கெட் அணிந்து லாங் ரைட் செல்வது அவசியம்

நீங்கள் உங்கள் பெண் துணையோடு பயணிக்கும் பட்சத்தில் பில்லியனில் அமர்ந்துள்ள அவருக்கும் பாதுகாப்பு கவசங்கள் தேவை.

நாம் விபத்தில் வண்டியில் இருந்து கீழே விழுந்தால் முதலில் பாதிக்கப்படுவது கைகளே. எனவே லாங் ரைட் செல்வோர் கட்டாயம் கையுறைகள் அணியத் தவறாதீர்கள்.