அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!! பைபிள் பொன்மொழிகள்...

இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையிலும் உற்சாகத்தை இழக்காதீர்.

விருப்பு, வெறுப்பு இல்லாமல் வாழ்ந்தால் நுாறாண்டு வாழலாம்.

பணத்தின் மீது நம்பிக்கை வைக்காதீர். பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.

துன்பம் தந்த அனுபவித்த காலத்தை மறந்து விடுங்கள். அது கற்றுக் கொடுத்த பாடத்தை மறக்காதீர்கள்.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னும் மண்டியிடத் தேவையில்லை.

கோபம் நமக்கு பலம் அல்ல... பலவீனமே. கோபத்தை கட்டுப்படுத்தாதவர் 'கோட்டை சுவர் இடிந்த நகரம் போன்றவர் என்கிறது நீதிமொழி.

விவேகம் என்னும் நற்குணத்தால் கோபத்தை தணியுங்கள்.