குழந்தைகளின் துவக்கநிலை பார்வைத்திறனை சரி செய்ய முடியுமா?

கண்பார்வை குறைபாடு ஏற்படும் போது பள்ளியில் போர்டிலுள்ள எழுத்துக்கள் சரிவர தெரியவில்லை என ஒருசில குழந்தைகள் ஆசிரியர்களிடம் கூறுவார்கள்.

அப்போது ஆசிரியர்கள் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.

சில நேரங்களில் இதுபோன்ற மாணவர்களை முன் இருக்கையில் அசட்டையாக உட்கார வைக்கும் நிலை உள்ளது.

இது அந்த குழந்தையின் பார்வைத் திறனை தொடர்ந்து பாதிக்கும். பார்வை திறன் குறையும் போது குழந்தைகள் உற்றுக்கவனித்து படிப்பதால் தலைவலி ஏற்படும்.

இதுபோல் தலைவலி ஏற்பட்டால் டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் குழந்தைகளின் பார்வைத்திறனை சரிசெய்ய முடியும்.

இல்லாவிட்டால் அதிக பவர் கொண்ட கண் கண்ணாடிகளை அணிந்து பார்வை குறைபாட்டுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

அதிக நேரம் டிவி, ஸ்மார்ட் போன் பார்ப்பதாலும் பார்வை குறைபாடுகள் ஏற்படுகிறது; இதனை தவிர்க்க வேண்டும்.