பிரிட்ஜில் வைத்த தர்பூசணியை சாப்பிடலாமா?
கோடைக்கு இதமான தர்பூசணியில் 92 சதவீதம் தண்ணீர் இருப்பதால், உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது.
இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் உட்பட பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
மிகக் குறைவான கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது உகந்த சாய்ஸ்.
தர்பூசணி ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உடலில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
ஆனால், ஊட்டச்சத்துகள் குறையும் வாய்ப்புள்ளதால், தர்பூசணியை பிரிட்ஜில் வைக்கக்கூடாது என்பது நிபுணர்களின் அட்வைஸாகும்.
பிரிட்ஜில் வைப்பதை விட அறை வெப்பநிலையில் வைக்கப்படும் தர்பூசணியில் அதிக சத்துக்கள் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வெட்டப்பட்ட தர்பூசணியை பிரிட்ஜில் வைக்கும் போது, அதில் பாக்டீரியாக்கள் வளரவும் வாய்ப்புள்ளது.
அதேவேளையில், பிரிட்ஜில் வைக்கப்பட்ட தர்பூசணியை ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் வடிவில் சாப்பிடலாம்.