நடிகர்கள்போல அனைவரும் தினமும் விக் பயன்படுத்த முடியுமா?
முடி உதிர்வுப் பிரச்னை உள்ள பலர் தற்போது பல லட்சங்கள் செலவழித்து செயற்கை ஹேர் பிளான்டிங் சிகிச்சை செய்துகொள்கின்றனர். இரண்டு லட்ச ரூபாய் துவங்கி பல லட்சங்களுக்கு சிகிச்சைகள் உள்ளன.
நடிகர் கமல் வெளிநாட்டுக்குச் சென்று முடி அடர்த்தி குறைந்த இடங்களில் 'செலக்டிவ் ஹேர் பிளான்டிங்' செய்து வந்ததாக கூறுவதுண்டு. பிரபு, பாக்யராஜ், ஆனந்தராஜ் உட்பட பலரும் இந்த பட்டியலில் உள்ளனர்.
அதேவேளையில் ஹேர் பிளான்டிங் சிகிச்சையில் அரிப்பு, எரிச்சல், வீக்கம் ஏற்படுவதுடன் ஆண்மை குறைபாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படக்கூடும் என தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால், ஆபத்தை உணர்ந்த நடிகர்கள், தற்போது விக் பயன்படுத்துகின்றனர். ரஜினிகாந்த், விஜய், கவுண்டமணி, செந்தில், விஜயகுமார் உள்ளிட்ட பல நடிகர்கள் விக் பயன்படுத்தி நடித்துள்ளது அனைவரும் அறிந்ததே.
நாள் முழுக்க விக் அணிய விக் அணியும் முன்னர் விக் கேப் லைனர் அணிவது அவசியம். இது தலையில் வியர்வை, காற்றின் தூசுக்களில் இருந்து விக்-கை காக்கும்.
தினம்தோறும் விக் அணிபவர்கள் 3 முதல் 4 விக்-களை வாட்ரோபில் வைத்துக்கொள்வது அவசியம். இவற்றை மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம்.
விக்-களை ஐந்து முதல் ஆறு முறை பயன்படுத்திய பின்னர் விக் கிளீனர் கொண்டு அவற்றை சுத்தம் செய்வது அவசியம். குறிப்பாக இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் வெயில் காரணமாக விக் சீக்கிரம் அழுக்காகும்.
விக் பயன்படுத்தி முடித்ததும் விக் ஹேங்கரில் தொங்கவிடுவது நல்லது. விக்-ஐ குவியலாகப் போட்டு வைக்கக் கூடாது. விக்-ஐ பயன்படுத்தும் முன்னர் அதற்கான சீப்பு கொண்டு வாரிவிடுதல் நல்லது.
விக் உடன் படுக்கையில் படுத்து உறங்குவது போன்ற செயல்களைத் தவிர்ப்பது அவசியம். காலை விக் பொருத்திக்கொண்டு வெளியே சென்றால் அடிக்கடி தலை பக்கம் கையை கொண்டு செல்லக்கூடாது.