தைராய்டு பாதிப்பினால் கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு ஏற்படுமா?

கழுத்தின் முன்பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி ஹார்மோன்களை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரப்பதால் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது.

பெரியவர்களுக்கு தைராய்டு அளவு 0.3 முதல் 4.5 வரை இருக்க வேண்டும்.

4.5 அளவுக்கு மேல் இருந்தால் ஹைப்போ தைராய்டிசம், 0.3 அளவுக்கு கீழ் இருந்தால் ஹைப்பர் தைராய்டிசம்.

கர்ப்பகாலத்தின் முதல் 3 மாதங்களில் தைராய்டு அளவு 0.1 முதல் 2.5 ஆக இருக்க வேண்டும். 2.5 அளவுக்கு மேல் இருந்தால் குழந்தையின் மூளை வளர்ச்சி, நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

4வது முதல் 6வது மாதத்தில் தைராய்டு அளவு 0.2 முதல் 3.0 ஆக இருக்க வேண்டும்.

7வது முதல் 9வது மாதத்தில் தைராய்டு அளவு 0.3 முதல் 3.0 ஆக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

தைராய்டு பாதிப்பு இருந்தும் சரியான மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்ளவில்லை என்றாலும், அளவு கட்டுக்குள் இல்லை என்றாலும் கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்கள் முன்னதாகவே தைராய்டு பரிசோதனை செய்து கொண்டு தயாராவது சிறந்தது என டாக்டர்கள் கூறுகின்றனர்.