உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் பொட்டாசியம் சத்து
உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் உடனே, உணவில் உப்பைக்
குறைக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துவர். ஆனால், இதைவிடச் சிறந்த தீர்வு
உணவில் பொட்டாசியத்தை அதிகப்படுத்துவது என்கிறது சமீப
ஆய்வு.
நாம் பயன்படுத்தும் உப்பில் சோடியம் அதிகமாக உள்ளது. உடலுக்கு சோடியம் இன்றியமையாதது.
ஆனால் அதுவே அதிகமாகும்போது, அதைச் சமன்படுத்த உடல் அதிகமான தண்ணீரைக் கேட்கும். அதிகமாகத் தண்ணீர் பருகும்போது ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதயத்துக்கு வேலைப் பளு கூடுவதால், பல மரணங்களுக்கு ரத்த அழுத்தம் காரணமாக அமைகிறது.
சமீபத்தில்
கனடா நாட்டிலுள்ள வாட்டர்லுா பல்கலை மேற்கொண்ட ஆய்வில் பொட்டாசியம்
நிறைந்த உணவுகளை உண்பதால் ரத்த அழுத்தம் குறையும் என
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொட்டாசியம் சத்து ரத்த நாளங்களுக்கும், இதயத்துக்கும் மிகவும் நல்லது.
அதேபோல அளவுக்கு அதிகமான சோடியதைச் சிறுநீர் வழியாக வெளியேற்ற சிறுநீரகத்திற்கு உதவி செய்கிறது.
எனவே
பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ள வாழைப்பழம், ஆப்பிரிகாட், சர்க்கரைவள்ளிக்
கிழங்கு, ப்ரோக்கோலி முதலியவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பது நல்லது என்பது
டாக்டர்களின் அட்வைஸாகும்.