சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: விரைவில் துவக்குகிறது மத்திய அரசு

ஹியூமன் பேப்பிலோமா வைரஸ் தொற்று கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணம். இதில் 14 வகைகள் புற்றுநோயை ஏற்படுத்தும் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் எச்பிவி 16, எச்பிவி 18 ஆகியன 71 சதவீத பாதிப்புக்கு காரணம்.9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு ஒரு டோஸ் போட சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி இலவசமாக போடும் திட்டத்தை நாடு முழுவதும் விரைவில் துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஒரு முறை போடப்படும் கார்டசில் என்ற தடுப்பூசி போடப்படும். இந்த திட்டமானது சிறப்பு தடுப்பூசி இயக்கமாக செயல்படுத்தப்படும். வழக்கமான தடுப்பூசி திட்டங்களின் கீழ் வராது.

குறிப்பிட்ட வயது பெண்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தும்போது, அவர்களுக்கு புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என கூறப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்தடுப்பூசியை மகளிர் குடும்பநலத்துறை சார்பில் 9 -14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.