உடல் பருமன், மன அழுத்தத்துக்கு யோகா, இயற்கை மருத்துவம் தீர்வு தருமா?

உடலுக்கு தேவையான அளவை விட, அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை தொடர்ந்து உண்பது மற்றும் போதிய உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமன் ஏற்படுகிறது.

அதிக உடல் பருமனால் சிலருக்கு மன அழுத்தம் உண்டாவதால், பணியில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் உள்ள சிகிச்சை முறைகள் உடலின் வளர் சிதை மாற்றத்தை மேம்படுத்துவதால் உடல் எடை குறையும்.

தினமும் சரியான முறையில் யோகாசனம், உடற்பயிற்சி செய்து வந்தால் உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு படிப்படியாக எரிக்கப்படும்.

பழங்கள், காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள் உள்ளிட்ட சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை, எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

போதிய துாக்கம், தண்ணீர் குடிப்பது உடலை சமநிலையில் வைத்திருக்க உதவும். இதனால் மன அழுத்தமும் குறையும்.

உடல் எடையை திடீரென குறைக்க முயற்சிக்காமல் மாதத்திற்கு 2 முதல் 3 கிலோ என்ற அளவில் முயற்சிக்க வேண்டும்.