கொங்கு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி… காரம் கொஞ்சம் தூக்கல்!

வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு சிக்கன் வைத்து செய்யப்படும் கொங்கு ஸ்டைல் காரசாரமான ரெசிபி தான் சிக்கன் சிந்தாமணி.

இதெல்லாம் தேவை : சிக்கன் - 500 கி , நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, சின்ன வெங்காயம் - 1 கப்

வரமிளகாய் - 12, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் - 1/4 கப், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

இறுதியாக கழுவி வைத்த சிக்கனை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, 1/4 கப் நீரை சேர்த்து வாணலியை மூடி சிம்மில் வேக வைக்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்ததும், அதில் துருவிய தேங்காயைத் தூவி நன்கு கிளறி, நீர் வற்றியதும் இறக்கினால், சிக்கன் சிந்தாமணி தயார்.