குழந்தைகளுக்கு அடிக்கடி சளித்தொல்லை... உணவு பழக்கத்தில் மாற்றம் அவசியமா?

மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி சளித்தொல்லை உண்டாகும்.

இதற்கு தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என பல காரணங்களை பட்டியலிடலாம். உணவு பழக்கம் மாற்றத்தால் இதை கட்டுப்படுத்த வழி உண்டு.

பொதுவாக வைரஸ் தொற்றுகளால் சளி, காய்ச்சல் ஏற்படுகிறது.

சுவாச மண்டல பிரச்னைகள், ஆஸ்துமா, மூச்சு குழாய் வளர்ச்சி போன்றவற்றால் சளி உற்பத்தி அதிகரிக்கலாம். காற்று மாசு காரணமாகவும் சளி ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு போதுமான ஓய்வளிப்பது, பழங்கள், காய்கறிகள், புரத உணவுகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

தண்ணீர், திரவ உணவுகளை அதிகமாக கொடுப்பதால், சளியை தளர்த்தி உடலின் நீர் இழப்பை தடுக்கலாம்.

வரன்முறைப்படி குழந்தைகளுக்கு உரிய நேரங்களில் தடுப்பூசி செலுத்துவது, வீட்டை சுத்தமாக பராமரித்தல், கிருமிகள் பரவுவதை தடுக்க அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்துதல்...

சளி அறிகுறி உள்ளவர்களிடமிருந்து விலக்கி இருத்தல், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

பாலில் மஞ்சள் துாள் கலந்து கொடுப்பது நல்ல தீர்வாக இருக்கும். இவற்றின் தாக்கம் அதிகமாக இருந்தால், டாக்டரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் கொடுக்கக்கூடாது.