குழந்தைகள் தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கிலிருந்து தப்பிக்க... !

தற்போதைய சூழலில் டெங்கு, மலேரியா, புளு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், சளி பிடித்தல், தண்ணீரால் கிருமி தொற்றுகள் ஏற்பட்டு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, குடிநீரை நன்கு கொதிக்க வைத்து, சூடு போனதும் குழந்தைகளுக்கு குடிக்க தர வேண்டும்.

எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

துரித உணவுகளை சாப்பிடக்கூடாது.

முடிந்தளவு சூடான உணவுகளை சாப்பிட வேண்டும்.

இந்த சீசனில் கிடைக்கக்கூடிய பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

புரதச்சத்து உள்ள உணவுகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.