கண் இமைகளை அழகாகக் காட்டுவதற்கு பெண்கள் மஸ்காரா உபயோகின்றனர்.

ஒரே நிமிடத்தில் உங்கள் கண்களை பெரியதாகவும், அழகாகவும் மாற்றும் ஒரு அழகு சாதனம் மஸ்காரா.

கி.மு.3000-ம் நூற்றாண்டிலேயே எகிப்திய பெண்கள் சூரிய ஒளியில் இருந்து கண் இமைகளைப் பாதுகாக்க கண் மையை இமைகளிலும் தடவி மஸ்காரா போட துவங்கியுள்ளனர்.

மாஸ்காரா போடும் முன் அதை நன்கு குலுக்க வேண்டும். பின்பு மூடியைத் திறந்து முன்னும், பின்னுமாகத் திருகி எடுக்க வேண்டும்.

ஒரு முறை மஸ்காராவை தடவி பின்னர் சிறிது நேரம் கழித்து அது காய்ந்த பின்னர் மற்றொரு கோட்டிங் போட வேண்டும்.

மஸ்காராவில் வினிகர் நாற்றம் வீசுகிறது என்றால் அதை நீங்கள் தூக்கி போட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

மஸ்காரா போடுவதால் இமைகள் விறைப்பாகவும், கடினமாகவும் மாறும். அதனால் தூக்கத்தில் இமைகள் எதிலாவது இடித்தால் உடைந்துவிடும் அபாயம் உள்ளது.

நீங்கள் தூங்க செல்வதற்கு முன்னர் மஸ்காரா பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மாஸ்காரா போட்டிருந்தால் கண்டிப்பாக கழுவவும்.

கண்களின் மேக்கப்பை மெதுவாக அகற்ற, க்ளென்சிங் ஜெல் மற்றும் காட்டன் துணிகளைப் பயன்படுத்த வேண்டும்.