மூட்டுகள் வலிமை பெற என்ன செய்யலாம்?

மூட்டுகளில் ஏற்படும் அசவுகரியம், வலி, சோர்வு, வீக்கம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் இயல்பாக நினைத்து புறக்கணிக்கக்கூடாது.

தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம், எடையைக் கட்டுக்குள் வைத்தால், எலும்பு வலிமை பெறும்.

எந்தெந்த உடல் அசைவுகள் வலியை அதிகரிக்கின்றன என்பதையும் தெரிந்து, மூட்டு மீதான அழுத்தத்தைக் குறைக்க வேண்டியது அவசியம்.

அடிக்கடி உட்கார்ந்து எழும் போது, மாடிப்படி ஏறும் சமயங்களில் வலி அதிகமானால் குறைத்துக் கொள்ளலாம்.

மூட்டுகளுக்கு இடையே பசை போல் செயல்பட்டு, 'குருத்தெலும்பு' உருவாக உதவும் ஹார்மோன் 'ஈஸ்ட்ரோஜன்'.

மாதவிடாயின் போது ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறையும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு சுரப்பு மேலும் குறையும். எனவே மூட்டு வலி அதிகரிக்கும்.

ஹார்மோன் மாற்றங்களால் உடல் எடை அதிகரிப்பதால், மூட்டுவலி வரலாம். நடை பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் என தினசரி உடற்பயிற்சிகள் அவசியம்.

போதியளவு ஓய்வு எடுத்துக் கொண்டாலே ஓரிரு நாட்களில் மூட்டு வலிகளை குணப்படுத்தலாம். வலி குறையாவிட்டால் டாக்டரிடம் கட்டாயமாக கலந்தாலோசிக்க வேண்டும்.

காச நோய், நீரிழிவு பாதிப்பு இருந்தாலும் மூட்டு வலி ஏற்படலாம்.

முதுகுத் தண்டுவடம், இடுப்பில் ஏற்படும் அதீத வலிக்கு, 'மூட்டு விறைப்பு, முதுகெலும்பு பிடிப்பு காரணமாக இருக்கலாம்.