சளி, வறட்டு இருமலுடன் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுது...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சளி, வறட்டு இருமலுடன் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.

இரவில் கன மழை, பகலில் வெயில் என, தட்ப வெப்ப நிலை மாறி நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உடல் சோர்வு, மாலைநேர குளிர், வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவ சிகிச்சையிலும் பெரிதாக குணமாவதில்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.

சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி பாதிப்பு தொடர்பவதால், மர்ம காய்ச்சல் பரவுகிறதோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.

இதில், நடுத்தர வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவ்வகை பாதிப்புகள், டெங்கு, டைப்பாய்டு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகளாக இருக்கலாம் என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்காலக்கட்டத்தில் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் இருந்தால் கட்டாயம் கொதிக்க வைத்த நீரை பருக வேண்டும்.

இந்த சமயத்தில் நார்சத்து, விட்டமின் ஏ, சி கொண்ட பழங்கள், கிரீன் டீ, காய்கறி சூப் , இஞ்சி டீ போன்ற சுடு பானங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.