ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க ஏதாவது இயற்கை டானிக் இருந்தால் சொல்லுங்கள் என கேட்பவர்களுக்கு இதோ... ஏபிசி ஜூஸ்.
ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் என மூன்றையும் சேர்த்து தயாரிக்கப்படுவது தான் ஏபிசி [ABC] ஜூஸ்.
நம் தினசரி உணவில் சர்க்கரை கலக்காத பழச்சாறுகளை சேர்ப்பது மிகவும் நல்லது என்பது டயட்டீசியன்களின் அட்வைஸ்.
இந்த ஏபிசி ஜூஸ் நமது உடலுக்கு ஏராளமான பயன்களை அள்ளித்தருகின்றன.
ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட்டை நன்றாகக் கழுவி தோல் நீக்கி மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டத் தேவையில்லை. அவ்வளவுதான் புத்துணர்ச்சி தரும் ஏபிசி ஜூஸ் ரெடி.
உடலில் உள்ள கழிவுகளை அகற்றி உங்கள் எடையை குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது.
ஏபிசி ஜூஸ் முகத்தில் இருக்கும் பரு, கரும்புள்ளிகளை தவிர்த்து, சருமத்துக்கு பொலிவு தருகிறது.
அல்சரால் ஏற்படும் குடல் புண், வயிற்று புண்களை குணப்படுத்த இந்த ஜூஸ் உதவுகிறது.
ஜூஸில் கேரட் இருப்பதால் கண் எரிச்சல், வலி, பார்வைத் திறன் குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாகிறது.