ஊட்டச்சத்து நிறைந்த ப்ரோக்கோலி ஸ்மூத்தி... கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
வைட்டமின் சி, கே சத்துக்கள் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், ஒமேகா 3, மாங்கனீசு, கால்சியம், இரும்பு போன்ற தாதுக்கள் ப்ரோக்கோலியில் நிறைந்துள்ளன.
ஒரு கப் பச்சை ப்ரோக்கோலியில் வெறும் 25 கலோரிகள் மற்றும் 2 முதல் 3 கிராம் வரை நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதிலும் 5 கிராமுக்கும் குறைவான கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது.
மலச்சிக்கல், செரிமான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த உணவாக இந்த ப்ரோக்கோலி உள்ளது. உணவு செரிமானமாக உதவும் அமிலங்களின் செயல்பாட்டை அதிகரித்து செரிமான பிரச்னையை சரி செய்கிறது.
ப்ரோக்கோலியில் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. எலும்பு வலுப்பெறாமல் இருந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
நான்கு பெரிய ப்ரோக்கோலி பூக்கள், கால் கப் பாலக்கீரை, ஒரு வாழைப்பழம், அரை மாம்பழம், அரை கப் பால், கால் கப் தயிர், தேவையான அளவு வெண்ணிலா சிரப் ஆகியவற்றைச் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும்.
பிறகு உங்களுக்கு தேவையான அளவு இனிப்பு சேர்த்தால் ஊட்டச்சத்து நிறைந்த ப்ரோக்கோலி ஸ்மூத்தி தயார்.