இன்று உலக மூல நோய் தினம்! தீர்வுகள் சில!!
மூலம் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நவ. 20ல் உலக மூல நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மூல நோய் என்பது ஆசனவாயின் உள்ளேயும் அதைச் சுற்றியும் ஏற்படும் கட்டிகள். குறிப்பாக ஆசனவாயில் உள்ள நரம்புகளில் அழுத்தம் அடைந்து மூல நோயை ஏற்படுத்துகிறது
உடல் பருமன், மரபியல் பிரச்னை, கர்ப்பக்காலம், அதிக சூடு, அதிக நேரம் உட்கார்ந்திருத்தல், போன்ற பல்வேறு காரணங்களால் மூலநோய் ஏற்படலாம்.
மூல நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால் பாதிப்பு அதிகமாகி, அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்குக் கொண்டு போய்விடும். உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றத்தால் அதை சீராக்க முடியும்.
காய்கறி, பழங்கள், கீரைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். கார உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நேரம் தவறி உணவு உட்கொள்ளுதல், தூக்கமின்மை போன்ற பழக்கம் இருந்தால் அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மைதா உணவு பொருட்கள், எண்ணெயில் பொறித்த உணவுப் பொருட்கள் போன்றவற்றால் மலச்சிக்கல் ஏற்படும். அதனால் அவற்றை தவிர்க்கவும்.