பெண்களுக்கு வரும் மாதவிடாயும் மூட் ஸ்விங்கும்!
மூட் ஸ்விங்ஸ் எனப்படுவது உடலிலும், மனதிலும் சமநிலைப்படுத்த இயலாமல் ஒருசேர நிகழும் ஒரு தவிப்பு. எப்போதும் முகத்தில் கவலையும், குழப்பமும் இருக்கும்.
கேட்டவுடன் நிமிடத்தில் காபி, பிள்ளைகளுக்கு பிடித்தை கஷ்டமானலும் சமைப்பது என சகஜமாக இருப்பவர்கள், திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் எரிச்சலாகவும், சோகமாவும் காட்சி தருவார்கள்.
இதற்கு மாதவிடாய்க்கு முன் நிகழும் மனநிலை கோளாறு அல்லது பிரச்னை என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மாதவிடாய் சுழற்சிக்கு முக்கிய காரணியாக இருப்பது ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்டிரான் ஹார்மோன்கள். இந்த ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் தான் மூட் ஸ்விங்ஸ் வர காரணமாகும்.
இதனால் அவர்கள் அந்த சமயத்தில் பதற்றம், மனச்சோர்வு, முடிவெடுக்க முடியாத நிலை என ஒருவித தவிப்புடன் இருப்பார்கள்.
இந்த பிரச்னைகள் இருப்பவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்வது அவசியம். அதனால் எண்டோர்பின் என்ற ஹார்மோன் உடலில் சுரக்கும் இவை உங்கள் மனநிலை கூலாக வைக்கும்.
உடல் வெப்பத்தை சீராக வைத்தாலும் நீங்கள் அமைதியை உணர முடியும். அதனால் தினமும் 8 - 10 கிளாஸ் தண்ணீர் அருந்துவது அவசியம்.
சிட்ரஸ் அதிகமுள்ள பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளவும். டீ, காபியை தவிர்த்து கிரீன் டீ, லெமன் டீ குடிக்கலாம்.
மேலும் கால்சியம் நிறைந்த பால், தயிர், சீஸ், கீரைகள், தானியங்கள், இறைச்சி வகைகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.