ஸ்மார்ட்போன் அடிக்ஷனில் இருந்து விடுபடுவது எப்படி?
அனைத்து சோஷியல் மீடியா நோட்டிபிகேசன்களை 'ஆப்' செய்து வைக்கவும்.
அப்ளிகேஷன்களின் நிறங்கள் ஈர்க்கக்கூடியவை என்பதால், வெள்ளை, கருப்பு நிறத்துக்கு மாற்றுங்கள்.
சாப்பிடும் போதும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருக்கும் போதும் ஸ்மார்ட்போனில் பேசக்கூடாது என்பது போன்ற வரம்புகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
ஸ்மார்ட்போன் பார்ப்பதை முதலில் 10% அளவுக்கு குறைக்க வேண்டுமென சிறிய இலக்கை நிர்ணயிக்கலாம். தொடர்ந்து, படிப்படியாக குறைத்து முக்கிய தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
முடிந்தவரை பெட்ரூமில் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டாம். இது நிம்மதியான மற்றும் ஆரோக்கியமான தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
ஹோம் ஸ்கீரினில் தேவையான செயலிகளை மட்டும் வைக்கலாம்.
எப்போதும் செல்போனும் கையுமாக சுற்றாமல், மாறாக புத்தகம் படிப்பது, மியூசிக் கேட்பது என பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தேவையற்ற மன அழுத்தம் மற்றும் கவலையை போக்க, தியானம் அல்லது மூச்சுப்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.