வாடகைத்தாய் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சின்மயி!
பாடலாசிரியர் வைரமுத்து மீது மீடூ புகார் அளித்ததை தொடர்ந்து பெரும்பாலும் பரபரப்பு வளையத்திலேயே இருந்து வந்தார் பின்னணி பாடகி சின்மயி.
தொடர்ந்து சக பெண் கலைஞர்கள் ஏதாவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது தனது குரலை தவறாமல் பதிவு செய்தும் வந்தார்.
இந்த சமயத்தில் தான் கடந்த ஜூன் மாதம் திடீரென தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஒருசேர கொடுத்தார் சின்மயி.
வளைகாப்பு புகைப்படங்கள் எதையும் அவர் பகிரவில்லை என்பதால் வாடகைத்தாய் மூலம் சின்மயி குழந்தை பெற்றிருக்கலாம் என பலரும் சந்தேகக் கேள்விகளை எழுப்பினர்.
தற்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரம் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் தான் சின்மயி தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாடகைத்தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நான் எப்பொழுதுமே என்னுடைய பர்சனல் வாழ்க்கையை யாருக்கும் வெளிச்சம் போட்டுக்காட்ட விரும்பியதில்லை - சின்மயி
இனிமேலும் அப்படித்தான் என கூறி தான் கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.