உடல் எடையை குறைக்கும் மேஜிக்கல் தேநீர்...!

சைவம் மட்டுமின்றி அசைவ உணவுக்கும் பயன்படுத்தும் லவங்கப்பட்டை ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டது.

லவங்கப்பட்டையில், ஏராளமான ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

தினமும் லவங்கப்பட்டை தேநீரைக் குடிப்பதால் உண்டாகும் பயன்களைப் பார்க்கலாம்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 200 மி.லி., தண்ணீர் ஊற்றி 3 இன்ச் பட்டையை சேர்த்து பாதியாக வற்ற விடவும். ஆறியவுடன் வடித்துவிட்டு, 1 டீஸ்பூன் தேன் சேர்த்தால் பட்டை தேநீர் ரெடி.

காலையில் வெறும் வயிற்றிலும், இரவு தூங்குவதற்கு முன்பும் இதை குடித்து வர உடல் எடையை சீராகக் குறைக்கலாம். கெட்ட கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது இந்த மேஜிக்கல் தேநீர்.

பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது; வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது; தேவையில்லாத கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது.

இந்த தேநீரில் உள்ள பாலிபினால் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதால் நீரிழிவு பிரச்னைக்கு தீர்வாகிறது.

பி.சி.ஓ.எஸ்., என்ற கருப்பை நீர்க்கட்டி ஹார்மோன் பிரச்னையால் கருமுட்டைகள் உருவாக முடியாத சூழல் உண்டாகிறது. லவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் தப்பிக்க உதவுகிறது.