உணவே மருந்து... பாகற்காயின் ஆரோக்கிய நன்மைகள் !

இதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் கண்களுக்கு நன்மை அளிக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கிறது.

குடி பழக்கத்தால் ஏற்படக்கூடிய கல்லீரல் வீக்கத்தை பாகற்காய் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கருவிலுள்ள குழந்தையின் நரம்பு வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.

ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.

எனவே, அவ்வப்போது பொரியல், மசாலா, தொக்கு என பல வகைகளில் பாகற்காயை சேர்த்துக் கொள்ளலாம்.