பருவநிலை மாற்றம்... உப்பு கிடைக்குமா?

பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்வு, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பல பாதிப்புகள் உருவாகின்றன.

இது உப்பு உற்பத்தியிலும் கடினமான சவாலை உருவாக்கியுள்ளது.

உணவுப்பொருட்களில், தினசரி பயன்பாட்டில் உப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது.

இது பயிரிட தேவையில்லாதவற்றில் ஒன்றாகும்.

ஆனால், பருவநிலை மாற்றத்தால், பருவம் கடந்து பெய்யும் மழை, உப்புப் பாத்திகளிலுள்ள அடர் உப்புநீரை நீர்த்துப்போகச் செய்து, ஆவியாதல் செயல்முறையை நிறுத்துகிறது.

மேலும், திடீர் கனமழை, பாத்திகளில் தயாராகவுள்ள உப்பு படிகங்களை கரைத்து அடித்துச் செல்கிறது.

எனவே, உப்பு உற்பத்தியில் தடை ஏற்படும் சூழல் நிலவுகிறது.