காதலி பென்சியாவை மணந்தார் புகழ்
'குக் வித் கோமாளி' பிரபலம் நடிகர் புகழுக்கு இன்று எளிமையான முறையில் கோயிலில் திருமணம் நடந்தது
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ்.
தொடர்ந்து 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
புகழ் பென்சியா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
திண்டிவனத்தை அடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் இந்து முறைப்படி, நடிகர் புகழ் மற்றும் பென்சியா ஆகியோருக்கு திருமணம் நடந்தது
இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார், மதுரை முத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
புகழ் - பென்சியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற ஐந்தாம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.