வாட்ஸ்ஆப்பில் சைபர் தாக்குதல்! எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுரை!
வாட்ஸ்ஆப் பயனர்களைக் குறிவைத்து பெரியளவிலான மால்வேர் தாக்குதல் நடத்தப்படுவதாக மத்திய அரசின் அவசரகால கணினி கட்டுப்பாட்டுக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸ்அப் வெப், டெஸ்க்டாப் பயனர்களை குறிவைத்து மால்வேர் தாக்குதல் நடைபெறுகிறது.
ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் VBScript (.vbs) வகை தீங்கிழைக்கும் கோப்புகள் அனுப்பப்படுகின்றன.
பாதிக்கப்படும் செல்போன் அல்லது கணினியின் செயல்பாட்டை உளவுபார்க்கவோ அல்லது அதன் நெட்வொர்க்கில் உள்ள பிற கணினிகளுக்கு மால்வேரை பரப்பவும் முடியும்.
நம்பகமான நபர்களிடமிருந்து வந்தாலும் எதிர்பாராத .vbs கோப்புகளை திறக்க வேண்டாம். உண்மைத்தன்மை ஆராய்ந்த பிறகே திறக்க அல்லது பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கோப்பைத் திறப்பதற்கு முன் அனுப்பியவரிடம் தொலைபேசி அல்லது செய்தி மூலம் உறுதிப்படுத்தவும்.
.vbs கோப்பைத் திறந்தால் சாதனத்தின் கட்டுப்பாடு பறிபோவதுடன், கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் இருக்கிறது.
பயனர்கள் தங்களின் வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்யவும், இரு காரணி அங்கீகாரத்தை (two-factor authentication) செயல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.