பாரம்பரியமான பட்டுப்புடவைன்னா 'டிடி'க்கு ரொம்ப பிடிக்குமாம் !
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. துவங்கிய சிறிது நேரத்திலேயே நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்லும் ஸ்டைலால், ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.
சின்னத்திரை மட்டுமின்றி திரைப்படங்களிலும் அவ்வப்போது நடிக்கும் டிடி, சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளார். அடிக்கடி போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.
கடந்த சில நாட்களாக 'டிடி ஸ்டைல்' எனும் பெயரில் தனக்கு பிடித்தமான கண் கண்ணாடிகள், ஹேண்ட் பேக் மற்றும் லிப்ஸ்டிக் உட்பட பல்வேறு பொருட்கள் குறித்து பேசி வீடியோக்களை பதிவிடுகிறார்.
தனது பேவரைட் புடவைகள் குறித்த வீடியோவை சமீபத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பட்டுப்புடவைகள் என்றால் எனக்கு பிடிக்கும். பாரம்பரியமான பார்டர் கொண்ட பட்டுப்புடவைகள் மிகவும் பிடிக்கும்.
புடவை மற்றும் அதன் பார்டரில் மாடர்னை புகுத்துவது என்றால், எனக்கு வேண்டாம். அதற்கு பதிலாக மாடர்ன் உடைகளையே அணியலாமே.
எனவே, பாரம்பரியம் என்றால் சாதாரண பழங்கால பட்டுப்புடவைகளை கொடுங்கள் எனக் கேட்டு வாங்கி அணிவேன். குறிப்பாக, மஞ்சள் நிற புடவைகள் என்னுடைய பேவரைட் ஆகும்.
பட்டுப்புடவைகளை வாங்கும் போது கான்ட்ரா ஆகவும், அடர்ந்த நிறமாகவும் பார்டர் இருக்க வேண்டும்' என டிடி குறிப்பிட்டுள்ளார்.