அயோத்தி கருவறையில் உள்ள ராமரின் முகம் தரிசனம்.. பக்தர்கள் பரவசம் !
உ.பி., மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம் (ஜனவரி 22ல்) நடக்கிறது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, முக்கிய சடங்குகளின் ஒரு பகுதியாக கருவறைக்குள் பால ராமர் (ராம் லல்லா) சிலை நேற்று நிறுவப்பட்டுள்ளது.
முன்னதாக, வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்த ராம் லல்லா சிலையின் படங்கள் வெளியிடப்பட்டடிருந்தன.
இந்நிலையில், அயோத்தி கோவில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள பால ராமர் சிலையின் முகம் தரிசன படம் வெளியாகியுள்ளது.
இதில், சிலை வடிவமைப்பில் உள்ள ஒவ்வொரு நுனுக்கமும் வெகுவாக பிரமிக்க வைக்கிறது.
பால ராமர் பார்ப்பதற்கு எத்தனை அழகு என பக்தர்கள் பரவசமடைந்தனர்.
ஜன., 22ம் தேதி ராமர் கோவிலில் பிரதிஷ்டா விழாவிற்குப் பிறகு, மறுநாள் பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது.