இன்று இந்திய விவசாயிகள் தினம்!!

இந்தியாவில் விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 23ல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்களின் பிரதான தொழில் விவசாயம். நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது.

விவசாயத்திற்காக பல சட்ட திட்டங்களை கொண்டு வந்து மறுமலர்ச்சி ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் சரண்சிங்.

அவரது நினைவாக அவரின் பிறந்த தினமான டிச.23ல் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

முக்கியமாக சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை' சட்டத்தைக் கொண்டு வந்தார். மேலும் வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் பசியை போக்க உணவை படைத்து வரும் விவசாயிகள் போற்றத்தக்கவர்கள். பசியாற்றும் அவர்களை என்றும் மதிப்போம்.