டெங்கு, கொரோனா பரவல்.. மாணவர்கள் மீது கவனம் அவசியம்!
தமிழகத்தில் டெங்கு, கொரோனா, இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் இருப்பதால், பள்ளி மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
திடீர் மழைபொழிவு, வெப்பநிலை அதிகரிப்பு என, தட்பவெப்ப நிலை மாறுபட்டு வருகிறது. இதனால், காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்கும்படி, மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு, அந்தந்த மாவட்ட சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மாணவர்களுக்கு எளிதில் காய்ச்சல் தொற்று ஏற்படும்.
ஒரு மாணவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், மற்றவர்களுக்கும் எளிதில் பரவும்.
எனவே, மாணவர்கள் காய்ச்சலில் பாதிக்கப்பட்டால், அவர்களை வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்த வேண்டும்.
காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில், பள்ளி வளாகம் துாய்மைப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.