பருவநிலை மாறும் போது ஏற்படும் நோய்களும், தீர்வும்... !
பொதுவாக பருவநிலை மாறும் போது ஒவ்வொருவருக்கும் உடலில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு.
பருவக் காலங்களில் மக்கள் சந்திக்கக்கூடிய வைரஸ்கள் தாக்கத்தால் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும்.
இவற்றை தவிர்ப்பதற்கு சரியான வேளைக்கு உணவருந்த வேண்டும்.
இரவு 8 மணி நேரம் சீரான துாக்கம் வேண்டும்.
புரதச்சத்து மிக்க நுண்ணுாட்டமிக்க சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும்.
அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது.
எண்ணெயில் பொரித்த துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்தின் போது உடல் அதற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.