நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?
குளிர்ச்சித் தன்மையுள்ள பனங்கிழங்கில், நார்ச்சத்து அதிகமுள்ளதால் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், மலச்சிக்கலை தீர்க்கவும் உதவுகிறது. உடல் எடையை ஆரோக்கியமுடன் அதிகரிக்கிறது.
இதை வேக வைத்துச் சிறு, சிறு துண்டாக நறுக்கிக் காய வைத்து, அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கிச் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும்.
பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்துச் சாப்பிட்டால், பெண்களின் கர்ப்பப்பை பலமடையும். இரைப்பை உள்ளிட்ட உடல் உறுப்புகள் வலுவடைகிறது.
வாயு தொல்லையை ஏற்படுத்தக் கூடியது என்பதால், இதனுடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கிச் சாப்பிடலாம்.
பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வர, பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நீரிழிவு பாதிப்புக்குள்ளானோர் ஆசைக்காக ஒரு கிழங்கு என்ற அளவில் சாப்பிடுவதில் தவறில்லை.
அதேவேளையில், இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட முடியாது என்பதால் வீண்பயம் தேவையில்லை.