மன அழுத்தம் தரும் வீடியோக்கள்

தினமும் கட்டுப்பாடு இல்லாமல் நீண்டநேரம் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் உள்ளிட்ட குறுகிய நேர வீடியோக்களை பார்ப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

இதனால், மனம் மற்றும் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகள் உருவாகின்றன என ஆய்வு எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் சமீபத்தில் 98 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், சமூக வலைதளத்துக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு மனநிலை பாதிப்பு, பதட்டம், மன அழுத்தம் மற்றும் தனிமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக கண்டறிப்பட்டது.

மேலும், துாங்கும் வரை டிஜிட்டல் திரையை பார்ப்பது, துாக்கத்திலும் பிரச்னையை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஸ்மார்ட் போன்களில் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.