பெருங்குடல், மலக்குடல் கேன்சரை தவிர்க்க சில டிப்ஸ்...

நவீன வாழ்க்கை முறைகளால் உலகெங்கும் பெருங்குடல், மலக்குடல் கேன்சர் உட்பட, எல்லா வகை புற்று நோய்களும் அதிகரித்து வருகின்றன என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

கேன்சராக மாறும் முன், பல ஆண்டுகளாக இது பெருங்குடல் உள்பக்கம் சிறு மரு (பாலிப்) போல் தோன்றி மெல்ல வளரும்.

இது, எந்த வித உபாதையும் தராது. இந்த நிலையிலேயே, 'கோலனாஸ்கோப்பி' பரிசோதனை செய்தால் மட்டுமே கண்டறிய முடியும்.

உடல் எடையை சரியான அளவில் பராமரித்தல், சீரான உடற்பயிற்சி, புகையிலை தவிர்ப்பு, அதிக மது அருந்தாமல் இருத்தல் மிகவும் அவசியம்.

மேலும் மாமிச உணவுகளை குறைத்தல், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்த்தல், அதிக பழங்கள், காய்கறிகள் உண்ணுதல் நல்ல பலன் தரும்.

கோலான் பாலிப் வளர்ந்து கேன்சராகி நம்மை வீழ்த்தும் முன், வாழ்வியல் மாற்றங்கள், சரியான நேரத்தில் பரிசோதனைகள் செய்தால் இந்நோயை எளிதாக வெல்லலாம்.