எலி காய்ச்சல்... வராமல் எப்படி தற்காத்துக் கொள்வது?

வீட்டில் வளர்க்கக்கூடிய நாய், எலி போன்ற கொறித்துண்ணிகள், பண்ணை விலங்குகள், நோய் வாய்ப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாக பரவக்கூடியது தான் லெப்டோஸ்பிரோசிஸ் என்கிற எலி காய்ச்சல் நோய்.

இந்நோய் ஜூன் முதல் ஜனவரி வரை அதிகமாக பரவக்கூடும்.

தீவிர காய்ச்சல், கடுமையான உடல் வலி, உடல் சோர்வு, கண் எரிச்சல், மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை இதன் அறிகுறிகள்.

கடுமையான காய்ச்சலுடன் கூடிய உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்.

இந்த நோய் இருப்பதை உணர்ந்தால் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். சுத்தமான பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிலுள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்ற வேண்டும்.

வீட்டில் எலி உள்ளிட்ட உயிரினங்கள் வராதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.