பால் என்றால் உங்களுக்கு அலர்ஜியா? மாற்று இருக்கு கவலைய விடுங்க!
பாலில் லேக்டோஸ் எனும் சர்க்கரை இருக்கிறது. சிலருக்கு, குடலில் லேக்டோஸ் என்சைம் குறைந்த அளவில் உற்பத்தியாகும்.
லாக்டோஸ் என்ற புரதத்தை உடலால் செரிமானம் செய்ய முடியவில்லை என்றால் சருமத்தில் தடிப்பு ஏற்படுவது, சளி, செரிமானப் பிரச்னைகள் உருவாகும். இது தான் 'பால் ஒவ்வாமை'.
லாக்டோஸ் இன்டாலரன்ஸ் இருப்பவர்கள் பால் மற்றும் அனைத்து பால் பொருட்களையும் முழுவதுமாகத் தவிர்த்தல் நலம்.
தேங்காய்ப் பாலில் உடலுக்கு நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்களும் நல்ல கொழுப்பும் அதிகமாக இருக்கிறது.
கேழ்வரகில் பால் எடுத்து காய்த்து குடிக்கலாம். இதில் கால்சியம் அதிகம் உள்ளது. ஊட்டச்சத்துகள் நிறைந்தது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.
சோயா பாலில் புரதசத்து, நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்புசத்து போன்றவை அதிகமாக உள்ளன. குழந்தைகளுக்கு சோயா பாலை தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் எடை, உயரம் கூடும்.
பாதாமை ஊற வைத்து பால் எடுத்து குடிக்கலாம். இது உடல் எடை அதிகரிக்க உதவும். பார்வைத்திறன் மேம்படும். சருமம் பொலிவு பெறும்.
முந்திரி பாலில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முந்திரியை ஊறவைத்து பால் எடுக்கலாம்.
நிலக்கடலை பாலில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் இ, நியாசின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. நிலக்கடலையை ஊறவைத்து பால் எடுக்கவேண்டும்.