சாப்பிடாமலேயே உடல் எடை கூடுகிறதா? ஏன் தெரியுமா?
'உடல் பருமன்' என்றாலே ஆரோக்கியமற்ற உணவுமுறை அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதுதான் காரணம் என பலரும் கணிக்கின்றனர்.
ஆனால், ஆரோக்கியமான உணவு உட்கொண்டாலும் சுற்றுச்சூழலில் உள்ள சில ரசாயனக் கலவைகள் உடல் எடையை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த ரசாயனக் கலவைகள் ஒபீசோஜென்கள் (obesogens) என அழைக்கப்படுகின்றன. அஜீரணம், மாசுபட்டக் காற்றைச் சுவாசிப்பது போன்றவற்றால் பாதிப்பு உண்டாகிறது.
தற்போது வரை சுமார் 50 ரசாயனங்கள் ஒபீசோஜென்களாக இருக்கக்கூடும் என்று வரையறுக்கப்பட்டுள்ளன.
இது மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், செல்களின் செயல்பாடுகளும் மாறலாம்.
எனவே, உடல் பருமன், பிற வளர்சிதை மாற்ற நோய்களுக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
டிடெர்ஜென்ட்கள், உணவுப்பொருட்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள் என தினமும் பயன்படுத்தும் பொருட்களில் இந்த ரசாயனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, புகை பிடிக்காமல் இருப்பது, பாக்கெட் உணவுகள், குளிர்பானங்கள், பிளாஸ்டிக், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் லோஷன்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.